Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளைஅவர்களின் சாவு தொடர்பாக டென்மார்க் தமிழர் பேரவை விடுத்துள்ள இரங்கற் செய்தியறிக்கை.

டென்மார்க்.

07ம் நாள் ஜனவரி 2010

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் சாவுச்செய்தி டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல நூற்று ஆண்டுகளாக அன்னிய சக்திகளின் ஆக்கிரப்பில் அடிமைப்பட்டுளள் தமிழீழத் தேசத்தின் இழந்த இறைமையைமீட்க போராடும் தேசியதலைவனைப் பெற்றெடுத்த பெருமையுடைய அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தமிழினவரலாற்றின் மாபெரும் அவலம் முள்ளிவாய்காலில் இராஜபக்சா குடும்பத்தால் அரங்கேற்றப்பட்ட போதும் உறுதியுடன் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்துவந்தார்.

சர்வதேசத்தின் வாக்குறிதிகளை நம்பி முள்ளிவாய்காலை விட்டு வெளியேறிய மக்களுடன் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறிலங்கா அரசால் வதைமுகாம்களில இடம்பெயர்தோர் என்ற பெயரில் அடைக்கப்பட்டனர். வதைமுகாமில் அடைக்கப்பட்டிருந்த அமரர் திருவேங்கடம் வேலுபப் பிள்ளை அவர்களும் அவரது பாரியார் பார்வதி அவர்களும் தமிழ் இனத்தின் தலைவனை பெற்றெடுத்ததர்காக வதைமுகாமில் சிறிலங்கா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு அனைத்துலக சட்டங்களுக்கு மாறாக சிறைவைக்கப்பட்டனர்.

தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த செயதியை இன்று சிறிலங்கா படைப்பேச்சாளர் தெரிவித்துளார். இந்த திடீர் செய்தி அனைத்துல வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிறிலங்கா அரசின் தடுப்புமுகாம்களில் அவதியுறும் தமிழ்மக்களின் விடுதலைக்கு பாடுபடுவதே புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் அமைப்புக்களாகிய நாம் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு செய்யும் அதி உயர் அஞ்சலியாகும்.

இவரது பிரிவால் துயருறும் இவரின் துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக நிர்வாகம்

டென்மார்க் தமிழர் பேரவை

டென்மார்க்.

பின் குறிப்பு:
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கன அஞ்சலி நிகழ்வு 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை பி..13.15 மணிக்கு Damhavens Skole, Damhaven 13, 7100 Vejle 13 7100 ஏநதடந என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் டென்மார்க்தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெறும்.

0 Responses to டென்மார்க் தமிழர் பேரவையின் இரங்கற் செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com