Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரச தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்ச தனக்கு அடிக்கவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அச்சுறுத்தவில்லை எனவும் எஸ்பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்டவர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்தும் இந்தியாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவுமே நான் கட்சி தாவியதாக தெரிவிக்கப்படுவது கட்டுக்கதை எனவும் செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக வேலைப்பளு காரணமாக என்னால் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடமுடியாமல் போனது. இதனைச் சில ஊடகங்களும் எதிரணியினரும் தவறான பிரசாரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். பசில் ராஜபக்ச எனக்கு கன்னத்தில் அடித்து விரட்டியதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அச்சுறுத்தியதாகவும் இதன் காரணமாக நான் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செய்திகளை பரப்பி வருகின்றார்கள்.

இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவையாகும். முற்றிலும் சோடிக்கப்பட்ட கதைகளாகும். என்னை யாரும் அடிக்கவுமில்லை. அச்சுறுத்தவுமில்லை.

நான் அன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு போகும்போது இலஞ்சம் வாங்கவுமில்லை. மீண்டும் சுதந்திரக் கட்சிக்கு மாறும்போதும் அரச தலைவரிடம் பணம் வாங்கவுமில்லை.

ஒரு கட்சியில் இருக்கும்வரை அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டவனாகவே இருப்பேன். அதோடு ஒத்துப்போக முடியாது போனால் அங்கிருந்து வெளியேறிவிடுவேன்.

என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to பசில் எனக்கு கன்னத்தில் அடிக்கவில்லை கோத்தபாய அச்சுறுத்தவில்லை சொல்கிறார் எஸ்பி திசநாயக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com