Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டுநகர் மேயர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்தவாறே, எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால் தனக்கோ தனது பதவிக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படுமானால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாதுகாப்பிற்காக வந்தவர்களில் 15 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்காக தான் யாருடனும் சேர்வதற்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



நன்றி: பதிவு

0 Responses to மட்டக்களப்பு மேயர் சிவகீதா பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவிப்பு! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com