எமது மண்ணின் பேரிழப்பாக விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் சிவகாமி என்ற தமிழினி எமது மக்களை விட்டு பிரிந்திருப்பது கவலையளிக்கிறது என யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மண்ணை பூர்வீகமாகக் கொண்டு மருநிலத்தின் புதல்வியாக அவதரித்து கிளிநொச்சியில் பலரின் கவனத்தையும் தன் பேச்சாற்றல் ஆளுமை என்பவற்றால் பாடசாலைக் காலங்களிலேயே தன் வசப்படுத்தி,
இந்த நிலத்தை மேன்மை கொள்ள வைக்க வந்த ஒருவராக தமிழினி அவர்கள் அறியப்பட்டார்.
இனத்தின் மீதும் மொழியின் மீதும் இவர் கொண்ட தீராத பற்றும் ஆவலும் இவரின் பாடசாலைக் காலங்களிலேயே வெளிதெரிந்திருந்திருந்தது.
உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த மண்ணுக்கான விடுதலைப் போராட்ட தேவையை உணர்ந்து 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளில் தன்னை முழுநேர போராளியாக இணைத்துக்கொண்டு,
எமது மக்களுக்காக தன் உடல் பொருள் ஆவியனைத்தையும் எக்கணத்திலும் அர்ப்பணிக்க துணிந்தவராக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவருள் இருந்த பேராளுமையை உணர்ந்து கொண்ட இயக்கத்தின் தலைமை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெரிய அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் என்ற வலிமை மிக்க கடமையை கையளித்தது.
இந்த பொறுப்பை மிகவும் செவ்வனே நிறைவேற்றியதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
பெண்களை இந்த மண்ணில் சுதந்திரமுள்ளவர்களாகவும் ஆளுமை மிக்கவர்களாகவும் துணிந்தவர்களாகவும் உருவாக்குவதில் தமிழினி அவர்களுக்கு பெரும் பங்குண்டு.
அவரின் மேடைப் பேச்சுக்கள் ஆளுமையானவை. மக்களை விடுதலை அரசியல் மயப்படுத்தும் வலிமை மிக்கவை. அவரின் அரசியல் பணியால் இயக்கத்தில் இணைந்து கொண்ட போராளிகள் ஏராளமானவர்கள்.
எமது சகல மட்டங்களிலும் தமிழினி பணியாற்றினார். அவரின் ஆளுமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் பட்டது.
தன் தங்கைகள் எனப்பட்ட இளைய பெண்களை இந்த மண்ணை ஆளக்கூடியவர்களாக உருவாக்குவதில் அவர் கனவு இருந்தது.
துரதிஸ்ட வசமாக நசுக்கபட்ட இந்த போராட்டத்தின் எச்சமாக இருந்த தமிழினி இன்று எமது மக்களை விட்டு நெடும்பயணமாகின்றார்.
அவரின் மறைவில் எமது மண் கண்ணீரில் கரைகின்றது. தமிழினி என்ற ஆளுமை மிக்க போராளிக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதைகளை கொடுப்பதற்கு முடியாத இருண்ட காலத்தில் மக்கள் தவிக்கின்றார்கள்.
ஆயினும் தமிழினி கண்ட சுதந்திரமான சுபீட்சமான எமது நிலம் ஆளுமை மிக்க பெண்கள் சமுதாயம் வசப்படும் என்ற நம்பிக்கையோடு போராடுவதே இருப்பவர்களின் கடமையாக இருக்கின்றது.
எமது பெருமைக்குரிய பெண் தமிழினி அவர்களுக்கு என வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என சிறீதரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு சி.சிறீதரன் இரங்கல்