தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியில் வந்த தேமுதிக அதிருப்தியாளர்கள் 10 பேரும் இணைந்து மக்கள் தேமுதிக என்கிற இயக்கத்தை இன்று துவங்கி உள்ளனர்.
தேமுதிக, திமுகவுடன் இணைய வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் விரும்பியதாகவும், ஆனால், பிரேமலதா விஜயகாந்த் கடைசியில் தேமுதிகவை மக்கள் நலக் கூட்டணியில் இணைத்து, பெரும்பாலானவர்களின் அதிருப்தியை சம்பாதித்து உள்ளார் என்றும், தேமுதிகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திர குமார் தலைமையில் 10 பேர் கொண்ட அணியினர் தேமுதிக திமுகவில் இணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினர். ஆனால், இவர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் விஜயகாந்த்.
இதையடுத்து இவர்கள் கூடி ஆலோசித்து இன்று மக்கள் தேமுதிக என்கிற ஒரு இயக்கத்தைத் தொடங்கி உள்ளதாக சந்திர குமார் அணியினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். தேர்தலில் திமுக போட்டியிட வாய்ப்புக் கொடுத்தால் போட்டியிடுவேன் என்றும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தால் செல்வோம் என்றும் சந்திர குமார் தெரிவித்துள்ளார்.

0 Responses to சந்திரகுமார் அணி மக்கள் தேமுதிகவை ஆரம்பித்தது!