நேற்று ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி வெளியிடுவதற்காக அச்சிடப்பட்டிருந்த 'கொழும்பு' பத்திரிகை விநியோகப் பணிகள், அரசியல் அச்சுறுத்தல் காரணமாக அதன் உரிமையாளரினால் நிறுத்தப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா தொடர்பாக மேஜர் ஹர்ஷ குணவர்தன என்ற நபரினால் வெளியிடப்பட்ட உண்மைகள் பல இந்த வெளியிட்டில் வெளிவரவிருந்ததால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் -
ஜெனரல் சரத் பொன்சேகா மீது சேறுபூசுவதற்கு சவேந்திர சில்வாவினால் அச்சுறுத்தப்பட்ட ஹர்ஷ குணவர்தன என்பவர் தனக்க ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக தெரிவித்திருந்த உண்மைகளே நேற்றைய பத்திரிகையில் அச்சிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அழுத்தங்கள் விடுக்கப்பட்டதை அடுத்து குறித்த சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்கிவிட்டு பல இணக்கப்பாடுகளுடன் செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகை ஆசிரியர் குழாம் தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சவேந்திர டி சில்வா தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிடவிருந்த பத்திரிகைக்கு அரசு தடை!