Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வேலுப்பிள்ளையின் மறைவுகுறித்து அனைவரும் அஞ்சலி செலுத்தவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார்.

அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை பனாகொட இராணுவ முகாமில் காலமாகிவிட்டதாக அரச இராணுவ பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வேலுப்பிள்ளை என்ன காரணத்திற்காக பனாகொட முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர் மரணமைடைந்தற்கான காரணம், நடுநிலையான மருத்துவர்களின் பூர்வாங்க விசாரணை அறிக்கை வெளியிப்படவேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

இந்நாள்வரை 86 வயதுடைய அவரும் அவரது துணைவியாரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தமையானது மனிதாபிமானத்தின் பேரால் அனைவராலும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும். வேலுப்பிள்ளையின் துணைவியாரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென வற்புறுத்துகின்றோம்.

அரசுத்துறையின் காணி அதிகாரியாகக் கடமைபுரிந்த ஓய்வூதியரான வேலுப்பிள்ளை மிகுந்த மனிதாபிமானமும் மனிதப்பண்புகளும் நிறைந்த ஒருவராக விளங்கி வந்தவர்.

அவர் மரணமடைந்தற்கான காரணம் அறியப்பட வேண்டியிருந்த பொழுதிலும் அவர் இழப்பின் பொருட்டு அனைவரும் தம் ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் செலுத்தவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம்.

என்றுள்ளது.

0 Responses to வேலுப்பிள்ளைக்கு அஞ்சலி செலுத்துமாறு மாவை அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com