இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடை பெறவுள்ளது.தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பொதுக்குழுத் தீர்மானங்கள், கட்சியின் புதிய நிர்வாகிகளை அங்கீகரித்தல் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 60 ஆம் ஆண்டு மலர் வெளியீடு என்பன இடம்பெறவுள்ளன.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த மாநாட்டில் தலைமைப் பேருரையினை நிகழ்த்தவுள்ளார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சோ. சேனாதிராஜா தெரிவித்தார்.
இதேவேளை, கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இடம்பெறும். நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் சுமார் நூறு பேர் வரை இக்கூட்டத்தில் கலந்துகொள்வர்.



0 Responses to தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு நாளை யாழ்ப்பாணத்தில்!