மாத்தளையில் காவல்துறையினரின் எச்சரிக்கையும் மீறிச் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாகனச் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகனத்தை மறித்த போது, வாகனத்தைத் நிறுத்தாறு செலுத்தியபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இதன்போது வாகனத்தில பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். வாகனச் சாரதி காயமடைந்துள்ளார்.
இவ்விருவரும் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



0 Responses to மாத்தளையில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!