Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் உள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் பணியாளர்கள் தனிப்பட்ட ஈமெயில்கள் மற்றும் கூகுள் தேடல் தளம் போன்றவற்றை பார்வையிடுவதை அரசு தடுத்துள்ளது.

அதன் முதல் கட்டமாக சிறீலங்கா ஏயர்லைன் பணியாளர்களுக்கு இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிறீலங்கா ஏயர்லைன் அலுவலகங்களில் அதிகளவிலான பாதுகாப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

சிறீலங்கா ஏயர்லைன் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் 50 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசுக்கு எதிராக கருத்துக்களை உடையவர்கள் என்ற அச்சத்தை தொடர்ந்தே அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே சிறீலங்கா ஏயர்லைன் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான கொடுப்பனவுகள் மக்கள் வங்கியில் இருந்து கடனாகப் பெறப்படும் நிதியை கொண்டு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் எமிரேற்ஸ் நிறுவனம் அதன் முகாமைத்துவத்தை சிறீலங்கா அரசிடம் ஒப்படைத்த போது அதன் கணக்கில் 132 மில்லியன் டொலர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கூகுள் இணையத்தை பார்வையிட அரச பணியாளர்களுக்கு சிறீலங்காவில் தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com