Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கண்டிக்கு வரவேண்டாம் என்று சொல்லும் ஹெல உறுமய கட்சியின் கோஷம் இந்த நாடு பிளவுபடவில்லை என்ற வாதத்திற்கு எதிரானதாகக்காணப்படுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சற்று முன் தமிழ் மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

கண்டி மாவட்டம் ஹெல உறுமயவுக்கு மாத்திரம் உரியது என அவர்கள் கூறுவதானால் இந்த நாடு பிரிந்துள்ளது என்ற அச்சத்தை அது உருவாக்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாக நேற்று ஜாதிக ஹெல உறுமய கட்சியினர்மனோ கணேசன் கண்டிக்கு வரவேண்டாம்எனக்கூறி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

நான் கொழும்பிலிருந்து கண்டிக்கு வந்தவன் அல்ல.கண்டியிலிருந்து கொழும்புக்கு வந்து,மீண்டும் கண்டிக்கு வந்துள்ளேன்.எனது தந்தை அம்பிட்டிய என்ற ஊரைச்சேர்ந்தவர்.நான் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றவன்

இவ்வாறு மனோ கணேசன் தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் கருத்து வெளியிட்டார்.

இலவசமாக தனக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கின்றமைக்காக ஹெல உறுமய கட்சியினருக்கு தாம் நன்றி கூறுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆதவன்

0 Responses to நான் கண்டிக்கு வரக்கூடாதென்றால் நாடு பிளவு பட்டுள்ளதா: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com