டென்மார்க் நாட்டில் இன்று 28ம் திகதி சுதந்திர தமிழீழ தனியரசை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பு 32 நகரங்களில் நடைபெறுகின்றது. இந்த வாக்கெடுப்பு டென்மார்க் தமிழர் பேரவையின் தேர்தல் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டு வுளே புயடடரி எனும் சுயாதீனமான அமைப்பினால் நடாத்தப்படுகின்றது.
தமிழர்கள் மீதான தொடர் அடக்குமுறைக்காக, சிங்களம் தேசிய மொழி, அரசாங்கத்தின் துணையுடனான தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம், கல்வி ரீதியல் தமிழர்களின் வளர்சசியை கட்டுப்படுத்துவதெற்கென தரப்படுத்தல் போன்ற அடக்கு முறைச்சட்டங்கள் என்பன இலங்கை அரசால் கொண்டு வரப்பட்டது.
இவற்றினை எதிர்தது தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் அமைதி வழி போரட்டங்கள் என்பனவற்றை செய்யும்போது இவ் போராட்டங்களிற்கு பதிலாக சிங்களவர்களால் தமிழர்கள் மீது தாக்குதல்களும் கைதுகளும் கொலைகளுமே அரங்கேற்றப்பட்டது.
1972ம் ஆண்டு சிங்கள இனத்தவர்களால் முழு இலங்கைத்தவிற்குமான முதலாவது அடிப்படை சட்டமானது தமிழ் பேசும் மக்களின் அனைத்து உரிமைகளையும் சட்டபூர்வமாக பறித்தது. அமைதி வழிப் போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்க சிங்கள அரசு முனைந்ததால், அடக்குமுறைச் சட்டங்களால் பாதிப்படைந்த இளந்தலைமுறையினர் ஆயத போராட்டம் மூலமே தமிழ் மக்களின் இறைமையையும் சுதந்திரத்தையும் மீளப்பெறமுடியும் என்ற முடிவுடன் விடுதலைப் போராட்ததை ஆரம்பித்தனர்.
இளந்தலைமுறையினரின் போராட்டங்களுக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவு பெருகியதால் அனைத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தை தீர்மானித்தினர். இதில் தமிழர்களின் பிரதேசம் காலனித்துவத்திற்கு முன்னர் எவ்வாறு இறைமையுடன் இருந்ததோ அவ்வாறு மீணடும் தமிழீழமாக மலரவேண்டும் என்பதே முலப்பொருளாக தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் கட்சியை தந்தை செல்வாவின் தலைமையில் உருவாக்கி 1977ம் ஆண்டு இலங்கைத்தவில் நடைபெற்ற நாடாளுமன்று தேர்தலில் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மக்களின் ஆணையை பெறும் நோக்குடன் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் சிங்கள கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முண்ணனி தமிழர் பிரதேசங்களில் 80 சதவீததிற்கு அதிகமான தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்று இலங்கை பாராளுமன்றில் முதலும் கடசியுமாக எதிர்க்கட்சியாக அமர்ந்தனர். முக்கியமாக தமிழ் பேசும் மக்கள் தமது வாக்குகளின் மூலம் இறைமையுள்ள சுதந்திரமான மதசார்பற்ற தமிழீழ தனியரசை மீள நிறுவுவதர்கான ஆணையை வழங்கியிருந்தனர்.
தமிழ் பேசும் மக்களின் ஆணையை தொடர்ந்து சிங்கள அரசு சட்ட மாற்றங்களை ஏற்பபடுத்தி தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை சனநாயக வழியிலும் எடுத்துரைப்பதை தடை செய்தது.
தமிழ் பேசும் மக்களின் கருத்து சுதந்திரம், தமிழர்களின் அமைதிவழி போராட்டங்களுக்கான பாதைகள் தடுக்கப்பட வேறு வழியின்றி இளந்தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டம் வலுப்பெற்று தமிழீழ நடைமுறை அரசு உருவாக்கப்பட்டது. 20க்கு மேற்பபட்ட நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீதான போரினால் தமிழீழ நடைமுறை அரசின் ஆயுதங்கள் 2009ம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது.
1948ம் ஆண்டு முதல் 2 லட்சம் வரையான தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள அரச பயங்கரவாதத்தில் இருந்து தமிழ் பேசும் மக்களையும் தமிழ் மண்ணையும் காப்பாற்ற போராடி 30.000ற்கு மேற்பட்ட போராளிகள் தமிழீழத்திற்காக விதையாகினர். 15 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் வழங்க சிங்கள அரசு மறுப்பதுடன் அங்கு வாழும் எம் உறவுகள் வதை முகாங்களிலும் திறந்த வெளிச்சிறைகளிலும் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களாக அடக்குமுறைக்குள் வாழ்நது கொண்டு தமது கருத்துக்களை சொல்ல முடியாதவர்களாக வாழும் நிலையில் தனித்தமிழீழத்திற்கான போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் தற்போதும் முன்னெடுக்கப்படுகின்றது. புலம் பெயர்நத தமிழர்கள் தாம் வாழ்நது வரும் சனநாயகம் பேணும் நாடுகளில் சுதந்திரமாக வாக்களித்து சுதந்திர தமிழீழ அரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள்வாக்கெடுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்கள் தமது தாயகம் தமக்கு வேண்டுமென சனநாயக முறைப்படி நாடாத்தப்படும் தேர்தல் மூலம் மீணடும் வெளிப்படுத்த வேண்டும் என்பதனை நோக்காக கொண்டே இவ்வாக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது.
இந்த வாக்கெடுப்பு நோர்வே பிரான்ஸ் கனடா ஜேர்மனி கொலன்ட் சுவிஸ் மற்றம் பிரித்தானியாவில் வெற்றியாக நடந்து முடிந்தது. அந்த வகையில் தற்பொழுது டென்மார்க் இத்தாலி மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இடம்பெறவுள்ளது.
டென்மார்க் நாட்டில் இன்று 28ம் திகதி சுதந்திர தமிழீழ தனியரசை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள் வாக்கெடுப்பு 32 நகரங்களில் நடைபெறுகின்றது. இந்த வாக்கெடுப்பு டென்மார்க் தமிழர் பேரவையின் தேர்தல் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டு வுNளு புயடடரி எனும் சுயாதீனமான அமைப்பினால் நடாத்தப்படுகின்றது.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் பின்வருவன வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை டென்மார்க் தமிழர் பேரவையின் தேர்தல் குழுவின் இணையத்தளமான www.tamilvalg.dk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
Sjælland (7): København, Hillerød, Næstved, Holbæk, Slagelse, Nykøbing Sj., Maribo,
Fyn (5): Faaborg, Middelfart, Nyborg, Odense, Svendborg
Sydjylland (6): Grindsted, Fredericia, Sønderborg, Vejen, Vejle, Åbenrå
Midtjylland (6): Horsens, Randers, Viborg, Ebeltoft, Århus, Skanderborg
Vestjylland (5): Herning, Holstebro, Ikast, Struer, Skjern
Nordjylland (3): Frederikshavn, Hobro, Aalborg
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
ஊடக தொடர்புகளுக்கு:
றெமூண் வாசிங்ரன் ,பேச்சாளர் டென்மார்க் தமிழர் பேரவை
தொலைபேசி: 0045 61307254
மின்னஞ்சல் : talsmand@dansktamilskforum.dk
மேலதிக தொடர்புகளுக்கு: 0045 52173671 அல்லது info@tamilvalg.dk



0 Responses to இன்று டென்மார்க்கில், வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள்வாக்கெடுப்பு