Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய நாடுகளில் பல கோடி டொலர்களை வருடாவருடம் பெற்று நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்க நடவடிக்கை எடுத்துவரும் 15 அரச சார்பற்ற நிறுவனங்களை அடையாளம் கண்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் இவ்வாறான அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதைத் தடுப்பதற்காக அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக சட்டமூலத்தில் மீண்டும் திருத்தங்களைச் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

சிறிலங்காவில் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புக்கள் தொடர்பாக அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 15 அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சு திட்டம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com