Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் அரசுக்கு எதிராக சதி முயற்சிகளை மேற்கொண்டாலோ அல்லது இராணுவ விதிகளை மீறினாலோ அவர்கள் மீது நட்டவடிக்கையை மேற்கொள்ள முடியும். அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று நீண்டகாலமாக இருந்தாலும் அதனை மேற்கொள்ள முடியும்.

மிகவும் மூத்த அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவரை விசாரணை செய்வதற்கு அவரின் பதவி நிலையை விட குறைந்தவர்களை நியமிப்பதற்கான சட்டங்களும் இராணுவச் சட்டங்களில் உண்டு.

ஜெனரல் பொன்சேகா மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இராணுவ அதிகாரிகளை கொண்ட குழுவை மகிந்தா ராஜபக்சா விரைவில் அமைப்பார். அது மூவர் அல்லது ஐந்து பேர் கொண்டு குழுவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1981 – 1998 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் சமரக்கோன் இராணுவ நீதிமன்ற விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to பொன்சேகா மீதான விசாரணை தொடர்பில் படை அதிகாரிகள் குழு: மேஜர் ஜெனரல் சமரக்கோன்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com