இந்தோனேசியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ், இந்தோனேசிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.244 இலங்கை அகதிகளின் பேச்சாளராக முன்வந்த அவர், தமது கப்பலை சுற்றி ரோந்து வரும் படகுகள் தொடர்பிலான சர்ச்சைக்குரிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் இந்தோனேசிய அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக அவர் படகில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், படகை சுற்றிலும் பாரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரால் தப்பி செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படவில்லை.
இந்த நிலையில் அவர் தப்பி சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. எனவே அவர், கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



0 Responses to அலெக்ஸ் இந்தோனேசிய அதிகாரிகளால் கடத்தப்பட்டார்?