இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.இவ்வாறு கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா சற்று முன் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் இந்தியத்தூதுவரான நிருபமா ராவ்,வெளிநாட்டமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் முதல் தடவையாக இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தேர்தல் இடம்பெறவுள்ள காலகட்டத்தில் நிருபமா ராவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கைத்தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



0 Responses to நாளை கொழும்பு வரும் நிருபமா ராவ்