Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிபர் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் ஆறடி குழிக்குள் புதைக்கப்பட்டு எனது சரித்திரம் முடிவடைந்திருக்கும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், மாத்தளையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர்,

2005ஆம் ஆண்டு தேர்தலில், பிளவுபட்டு சின்னா பின்னமடைந்திருக்கும் நாட்டை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோரிக்கையுடனேயே மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தனர். மக்களின் கோரிக்கையை நான் நிறைவேற்றினேன்.

கொழும்புக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த அபிவிருத்திப் பணிகளை நாட்டின் பிற பகுதிகளுக்கும் குறிப்பாக கிராமப் புறங்களுக்கும் விரிவுப்படுத்தினேன்.

வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் நமது நாடும் முக்கிய இடத்தைப் பெறக் கூடிய காலம் மிக அருகிலேயே உள்ளது. நமது சுற்றுலாத் துறை வெகுவாக வளர்ச்சியடையும் என்றார்.

மேலும் பேசிய ராஜபக்சே, நடந்த முடிந்த இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் ஆறடி அறைக்குள் அடைக்கப்பட்டோ அல்லது ஆறடி குழிக்குள் புதைக்கப்பட்டோ எனது சரித்திரம் முடிவடைந்திருக்கும் என்றார்.

நக்கீரன்

0 Responses to நான் தோல்வியடைந்திருந்தால் ஆறடி குழிக்குள் என் சரித்திரம் முடிந்திருக்கும்: ராஜபக்சே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com