வடக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து அடையாளங்களையும் இல்லாது செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக உயர் மட்ட அரசாங்க தரப்பு செய்தி ஒன்று தெரிவிக்கிறது.எதிர்வரும் காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு ஒன்று வடக்கில் செயற்பட்டதற்கான அடையாளமே இல்லாது செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டிடங்கள் மற்றும் இருப்பிடங்கள் குறிப்பாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் என்பன தற்போது மக்களால் அதிகம் விரும்பி பார்க்கும் சுற்றுலாப்பகுதியாக மாறி வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இவ்வாறு விடுதலைப்புலிகளின் அடையாளங்கள் சுற்றுலாத்தளமாக பேணப்படுவதனையும் அரசாங்கம் விரும்பவில்லை.
இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் கட்டிடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, அங்கு பாரிய விடுதிகள், ஹோட்டல்கள் என்பவற்றை நிர்மாணிக்க நடைவடிக்கை எடுக்கப்படுகிறது.



0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை அழிக்க அரசாங்கம் முயற்சி