சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பொன்சேகா, தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக இலங்கை அதிபர் ராஜபக்சே குற்றம் சாட்டினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்தும், விடுதலை செய்யக்கோரியும் பொன்சேகா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கினால் ஒழுங்கு நடவடிக்கை எதற்கு என கேள்வி எழுப்பி உள்ளார்.
பொன்சேகா ராணுவ தளபதியாக இருந்த போது 8500 ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தவர் எனவும், அதனால் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



0 Responses to பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு கிடையாது: மகிந்த