இப்பொதுக்கூட்டத்தில் யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார். செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
திருக்கோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் சண்முகராஜா கௌரிமுகுந்தன், உமாகாந்தி ரவிகுமார், இரத்தினவடிவேல் கண்மணி அம்மா. கோணாமலை திரவியராசா. தங்கவேலாயுதம் காந்தரூபன், தில்லையம்பலம் ஹரிஸ்ரன், பிலிப்பையா ஜோன்சன் ஆகிய வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை மூதூர் பிரதேசத்து மக்களைச் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுவற்கான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட உள்ளதாக, திருக்கோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ச.கெளரிமுகுந்தன் தெரிவித்துள்ளார்.



0 Responses to தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருமலை மாவட்டத்திற்கான முதலாவது பொதுக்கூட்டம் இன்று