இந்த வாக்கெடுப்பை குழப்புவதற்கு சிறிலங்கா அரசு கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட போதும் ஈழத்தமிழ் மக்கள் அதனை முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியால் உள்ள நீதிபதிகளின் அனைத்துலக ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் டொவ்ட் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் தபால்மூல வாக்களிப்புக்களும் இடம்பெற்றதனால் வாக்களிப்பு முடிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை (22) வெளிவரும் என ஏற்பாட்டாளர்கள் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ் மக்களின் உரிமைகளை மதித்து அவர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அவுஸ்திரேலியா அரசு ஆதரவுகளை வழங்க வேண்டும் என சபோர்பன் பகுதியில் உள்ள உள்ளூர் வாக்களிப்பு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட நகரசபை தலைவர் பிப் கின்மான் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் தமிழ் மக்கள் அமைதியாகவும், உரிமைகளுடனும் வாழ்வதற்கு அவுஸ்திரேலியா அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நியூசவுத் வேல்ஸ், விக்ரோரியா, ஏ.சி.ரி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்கள் வாக்காளர்களால் நிரம்பியது அவுஸ்திரேலியா மக்களை ஆச்சரியமடைய வைத்திருந்தது.
ஜனநாயக வழிகளில் தமிழ் மக்கள் தாமாகவே ஒன்றிணைந்து பெருமளவில் வாக்களிப்பில் பங்குபற்றியது மிகவும் முக்கியமானது என ரி.ஆர்.சி.ஏ அமைப்பின் பேச்சாளர் அட்றியன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள்வாக்கெடுப்பு உலகம் முழுவதிலும் தமிழ் மக்கள் பரந்துவாழும் நாடுகளில் நடைபெற்றுவருகின்றது. இதுவரையில் 10 நாடுகளில் வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுள்ளன.
0 Responses to வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான மீள் வாக்குப்பதிவில் 10,000 மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்: அவுஸ்திரேலியா