
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வந்த பிரபாகரன் தாயார் திருமதி பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்தும், இந்தியா வருவதற்கு அவர் மீதான இந்தியை அரசின் தடையை நீக்கக் கோரியும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்:
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிசிக்சைக்காக தமிழகம் வந்த திருமதி பார்வதி அம்மாள் அவர்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் இந்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
2003ஆம் ஆண்டு போட்ட தடை உத்தரவை காரணம் காட்டி உற்றார் உறவினர்களை இழந்து, கடுமையான பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் திருமதி பார்வதி அம்மாள் தமிழகத்திற்கு சிகிச்சை பெற வரும்போது இப்படியொரு அநீதியை செய்திருக்கிறார்கள்.
பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால், மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயார் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
முதல்வர் கருணாநிதி அவர்கள் திருமதி பார்வதி அம்மாள் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து சிசிக்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.
மேலும் பேசிய அவர், ஈழத்தைப் பற்றி பேசவோ, விடுதலைப்புலிகளைப் பற்றி பேசவோ, திருமதி பார்வதி அம்மாள் அவர்களைப் பற்றி பேசவோ, விடுதலைச் சிறுத்தைகள் பற்றி பேசவோ சுப்பிரமணியன் சாமிக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.
0 Responses to ஈழத்தைப் பற்றி பேசவோ, வி.புலிகளைப் பற்றி பேசவோ சுப்பிரமணிய சாமிக்கு எந்த அருகதையும் இல்லை: திருமா