Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் பணிபுரிந்துவரும் உதவி அமைப்புக்கள் மீது தொடர் வன்முறைகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மீதும் தனது வன்முறைகளை பிரயோகித்துள்ளது.

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர்களை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு சிறிலங்காவின் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வந்த இந்த நிறுவனம் ஒரு தொண்டர் அமைப்பாகவே இயங்கி வந்தது. அதில் பணியாற்றியவர்களில் பெருமளவானோர் அப்பாவி பொதுமக்களாவார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்த இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாக சிறிலங்கா குற்றப்புலானாய்வுத்துறை தெரிவித்துள்ளதுடன், அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் மீது சிறீலங்கா அரசு வன்முறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com