Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் மத்தியில், நாட்டை பிளவுபடுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தினை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கையில் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும் இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்யவேண்டும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்து கருத்து தொடர்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த கருத்து சரியென கூறினார். இது தொடர்பில் அவர் தெளிவுபடுத்துகையில் தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்மைப்பு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கூறினார். பயங்கரவாதமும், விடுதலைப் புலிகளின் தலைவரும் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், பொறுப்புடன் செயற்பட வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரிய பொறுப்பு எனவும் அவர் எடுத்துரைத்தார்.

அதைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருவது கவலைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இனிமேலாவது சிந்தித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்யவேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கூற்று சரியெனவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிலங்காவில் தடைசெய்யப்படலாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com