Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளி வாய்க்கால் ஈழத்தமிழர்களின் வலுவின் மூலவேரை அறுத்துவிட்டோம்! தமிழின அழிப்பின் பெரும்பகுதியை முடித்துவிட்டோம்! எஞ்சி இருப்பது அரசியல் களத்தில் வலுவுடன் இருக்கும் தமிழர் தேசிய கூட்டமைப்புத்தான்! அதையும் சிதைத்துவிட்டால் தமிழின அழிப்பை முழுமையாக முடித்துவிடலாம். என்று நினைத்து செயற்படுகிறது சிங்களத் தலைமைகள்.

அதற்காகவே வியூகம் வகுத்து தேர்தலை சிதைவுற்ற தமிழ் சமூகத்தின் மீது திணித்துள்ளளது அரசு.

பல சுயேச்சைக் குழுக்களையும், ஒட்டுக் குழுக்களையும் கூடவே இறக்கி தமிழ் வாக்குகளைச் சிதைத்து தமிழர் வலுவாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை நாட்டைப் பிளவுபடுத்தும் தன்மை கொண்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யவேண்டும். என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக் சசூளுரைத்துள்ளார்.

ஆயுதங்கள் மௌனிக்க செய்யப்பட்ட நிலையில் அரசியல் களத்தில் உள்ள ஒரே வலுவான ஜனநாயகக் கட்டமைப்பையும் மௌனிக்க செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் முன்னெடுத்துவரும் அனைத்துலக மட்டத்திலான ஜனநாயக உரிமையைக் கோரிக்கைகள் ஆர்வத்தோடு பல நாடுகளில் ஆலோசனைக்கு எடுக்கப்பட்டுவரும் வளர்ச்சியை முளையில் கிள்ளிவிட தழிழ் தேசியக் கூட்டமைப்பை ஒழித்துக்கட்டினால் "பாருங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். புலம் பெயர் தமிழர்கள் சொல்வதெல்லாம் பொய்"என்று பிரசாரம் செய்வதே அரசின் நோக்கு. இது இலங்கை அரசின் நிலைப்பாடு.

இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு இந்திய அரசும், தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழுத்தமாக்கி கூறியுள்ளார்கள். இதை இந்திய அரசோ, முதல்வர் கருணாநிதி அவர்களோ இத்தனை காலமாகியும் மறுக்கவில்லை. தி.மு.காங்கிரஸ் நாடாளுமன்ற நல்லெண்ணத் தூதுக்குழு வருகையும்,நடந்தேறியவையும் இதை உறுதிசெய்வது போல் அமைகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு இறுக்கமான நிதானமான தலைமைத்துவம் ஈழத்தமிழர்களுக்கு இருக்கக்கூடாது என்பது கொள்கையாக உள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பலவீனப்படுத்திய வரலாறு நல்ல பாடம்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போட்டியிட வைத்து தமிழ் வாக்குகள் சரத் பொன்சேகாவுக்குச் சேராமல் செய்ய எடுத்த முயற்சிக்கு கூட்டமைப்பு இணங்க மறுத்ததால் சிவாஜிலிங்கம் களம் இறக்கப்பட்டார். அவர் நீலச் சால்வையுடகன் சென்று கட்டுப்பணம் செலுத்தினார் என்பது வேடிக்கையானது.

ஜனாதிபதி தேர்தல் புயலைத் தாண்டியும் சிதையாத கூட்டமைப்பை உடைக்க தமிழ் காங்கிரஸ் வகையாகக் கிடைத்துள்ளது. இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையும் பறித்து ஒட்டுமொத்த தமிழக்தின் அரசியல் வலுவைக் குறைக்க அன்று துணைபோனதும் இந்த தமிழ் காங்கிரஸ்தான்.

இன்று கிழக்கு இலங்கையை, குறிப்பாக திருகோணமலையை தமிழர்கள் பிடியிலிருந்து விடுவிக்க துணைபோகிறது அதே தமிழ் காங்கிரஸ்.

தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே திருமலைத் தமிழ் காங்கிரசிலிருந்து தமிழர்களை விரட்டுகிறார்கள். பௌத்த பிக்குகள். தமிழ் காங்கிரஸ் வகிபாகத்திற்கு கைமேல் பயன் கிடைக்கிறது. இந்த தமிழ் காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டு தனித்துவம், தாயகம், சுயர்நிர்ணயம் என்ற கொள்கையிலிருந்து கூட்டமைப்பு விலகி இந்தியத் திட்டத்திற்கு அமைவாக நடக்கிறது என்பது இந்தியாவிற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம்கூட அதைச்சொல்கிறார். கூட்டமைப்புத் தேர்தல் கொள்கையில் இறைமைப் பகிர்வுடனான உள்ளக தன்னாட்சி (Shared sovereignty) என்று சொல்லப்படுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருநாடுகளின் ஒருங்கிணைந்த ஆட்சி என்று சொல்கிறது (confutation). சொல்லாட்சிக்கு நன்றாக இருக்கலாம். இன்று தேவை சொற்சிலம்பம் அல்ல,சூழ்நிலைக்கேற்ற யாதார்த்தமான நலன்பேண் நகர்வுதான். முள்ளி வாய்க்காலில் துப்பாக்கிகளை மௌனிக்க வைத்த இந்தியா தலைமையிலான 20 நாடுகள் நிலைப்பாட்டை புறந்தள்ளி அரசியல் பேசமுடியாது. அனைத்துலக மட்டத்தில் வட்டகை வல்லாண்மை நாடுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது.

எமது பிரச்சனையில் இன்றைய காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இந்தியா இன்னமும் வக்கரப் போக்கையே கடைப்பிடிக்கிறது. மத்தியில் காங்கிரசும் தமிழ் நாட்டில் தி.மு. ஆட்சியும் இருக்கிற வரையில் எதுவும் எமக்கு சாதகமாகத் திரும்பப்போவதுமில்லை. இந்த நிலையைமீறிப்போக இப்போதைக்கு வாய்ப்பும் இல்லை. இந்த நிலையை மீறிப்போகஇப்போதைக்கு வாய்ப்பும் இல்லை. இந்தச் சூழலில் நாம் இலங்கை ஆள்புலத்துக்குள்ளும், இறைமைக்கும்தான் சட்டரீதியாக இருக்கிறோம். இதிலிருந்து மீள வழியென்ன என்பதையதார்த்தமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

வேட்புமனுக் கிடைக்காமல் காங்கிரஸ் தலைமையில் இணைந்துள்ள கஜேந்திரன் இரண்டு கருத்துகளை நேர்காணல்களில் சொல்கிறார். ஒன்றுதந்தை செல்வா தலைமையிலான தோற்றுப்போன போராட்ட வடிவத்திற்கு கூட்டமைப்பு செல்கிறது ( தமிழ்க் கதிர் நேர்காணல்) . இது தந்தை செல்வாவின் அறவழிப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கூற்று. அதே நேர்காணலில் தான் வெளிநாடுகளில் பிரசார வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்ததாகச் சொன்னார்.

அவரது பிரசாரத்தை மீறி முள்ளிவாய்க்கால் அவலம் நடந்ததும் உண்மை. அப்படியானால் அவரது வெளிநாட்டுப் பரப்புரையும் தோற்றுப் போய்விட்டது அல்லவா? கூடவே மட்டக்களப்பில் ஏன் போட்டியிடவில்லை என்று கேட்டதற்கு தங்கள் இலக்கு கூட்டமைப்புத் தலைமைகளை இல்லாது செய்வதுதான் என்று கூறினார்.

மறுபுறத்தே பத்மினி சிதம்பரநாதன் பரப்புரைக் கூட்டமொன்றில் பொங்கு தமிழ் போன்ற நிகழ்சிகள் மூலம் படிப்படியாக வென்றெடுப்போம். என்று பேசியதாக செய்தி வெளியானது (GTV).

இந்த அணியின் தலைவர் வரதராஜன் திருமலை பறிபோய்விட்டது என்று வரைபடங்கள் மூலம் நிறுவுகிறார். ஆனால் இதே ஆய்வும் படங்களும் அமரர் பேராசிரியர் .மனோகரன் அவர்களால் (1981 வரையானது) நூலாக முன்வைக்கப்பட்டது.

தமிழர் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கிறதாம். தங்கள் அணி வென்றால் எல்லாவற்றையும் மீட்டுவிடுவார்களாம். ஆனால் இவர்கள் அனைத்துலக யதார்த்தத்தை, இந்தியாவை எப்படி அணுகப்போகிறோம் என்பதைப் பற்றி விளக்கம் தரவில்லை.

இரு நாடுகளின் ஒருங்கிணைந்த ஆட்சிக்கு (Coferderation) முதலில் தமிழீழம் பிரித்தெடுக்கப்பட வேண்டும் எப்படி அனைத்துலக யாதார்த்தத்திற்கு அப்பால் எப்படி பிரிக்க முடியும். இதுவரை எந்த நாடும் ஆதரவு காட்டவில்லை. இவர்கள் பேசுவது சிறுபிள்ளைத் தனமான பேச்சு. வெறும் சொற்சிலம்பு. திட்டமேதும் கிடையாது.

சோனியா காங்கிரசின் நிலைப்பாடு அல்ல இந்திய மக்களின் நிலைப்பாடு முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாடு அல்ல தமிழ் நாட்டு மக்கள் நிலைப்பாடு சிலந்திவலை பின்னுவதுபோல் இந்தியாவைச் சுற்றி சீனா பின்னிய வலைக்குள் இலங்கையும் சேர்ந்திருப்பதும், உள்நாட்டுப் பாதுகாப்புச் சீர்கேடுகளும் ஊழலில் உப்பிய சோனியா காங்கிரசை கூட பாதுகாப்பை மீளாய்வு செய்துள்ளது.

நாராயணியம் ஓரம் கட்டப்பட்டக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இல்லை. நாராயணிடம் பயிலுனராக இருந்த சிவசங்கர் மேனனிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.

முள்ளிவாய்க்கால் போரின் உச்சகட்டத்தில் அமெரிக்க மீட்புப் பணிக்கு தயாரரக இருந்தும் இந்தியா தடுத்துவிட்டது. சோனியா அரசு என்று சொல்லும்போது கருணாநிதியின் அரசும் சேர்ந்த நிலைப்பாடுதான்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்பு இந்தியா சென்ற அகதிகள் அகதி முகாம்களில் இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டார்கள். போர் பற்றிய செய்திகள் தெரிந்தவர்கள் தனியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஒரு மருத்துவரும் அடங்குவர். இப்போ இந்தியாவுக்குக் கூட கடல்வழியாக தமிழ் அகதிகள் தப்பிச் செல்ல முடியாதவாறு தடைச்சட்டம் வந்துள்ளது.

இலங்கை இந்திய அரசுகள் இரண்டுமே அகதிகளாக வேட்டையாடும் நிலைதான் உள்ளது. காரணம் போர்ச் செய்திகள் பரவிவிட கூடாது என்பதற்காகவே ஒஸ்ரேலியாகூட ஈழ அகதிகளை ஏற்க மறுப்பது நிறவாதத்திற்கு மேலாக இலங்கை அரசின் அழுத்தத்தில்தான் போர் அக்கிரமங்கள் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்படுவதற்கே.

இந்நிலையில் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மேற்கொள்ளும் வெளிப்படைத் தன்மை கொண்ட ஜனநாயக வழிமுறை நகர்வுகளிக் ஊடாக சொல்லிவரும் உண்மைகளைப் பல நாடுகள் அனுதாபத்தோடும் ஆர்வத்தோடும் கேட்கத் தொடங்கியுள்ளார். தமிழர் உரிமைகள் பேணப்படும் அரசியல் அதிகாரப் பகிர்வு கொண்ட யாதார்த்த அரசியல் தீர்வு வேண்டும் என்று முன்மொழிகிறார்கள்.

இலங்கை அரசுகளோ பதின்மூன்றாம் அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தையே திருத்திய அரசியல் யாப்பையே செயற்படுத்தாது இழுத்தடித்தது. ராஜபக்ச அரசு அந்த திருத்திய யாப்பின் மூல விசையான இணைந்த வட கிழக்கையே பிரித்துவிட்டது.

இந்திய-இலங்கை ஒப்பத்தத்தின் அடிநாதக் கோட்பாடான வட கிழக்கு தமிழர் வாழ்விடம் என்பதையே நாளாந்தம் சிதைந்து வருகிறது. இந்த நிலைமையை மாற்றி தமிழர் உரிமைகளை வென்றுவிட முடியும், அதற்கு முதலில் கூட்டமைப்புத் தலைமைகளை ஒழிக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற போர்வையுள் மறைந்து நிற்கும் தமிழ் காங்கிரசின் நிலைப்பாடு. இந்தியாவும் இலங்கையும் விரும்புவதும் அதுதான்.

இப்போது புரிகிறதா தமிழ் காங்கிரஸ் யாருடைய ஏவலில் கூட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது. என்று? தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமாருக்கு இருப்பும் கொழும்புதான். கையிருப்புகளும் கொழும்புதான்.

அவருக்கு யாழ்ப்பாணத்தில் தேவையேதுமில்லை தேர்தலில் வாக்குகள் கிடைக்காது என்பதால் முதன்மை வேட்பாளராக வரைவில்லை. மற்றவர்கள் செல்வாக்குச் செல்லுபடியானால்தான் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் போய்விடலாம் என்று நினைக்கிறார்.

இன்று உண்மையான தேவை ஒரு சிறு சலுகையைக் கூட சிங்களத் தலைமைகள் தரத் தயாராக இல்லை என்பதை அனைத்துலக சக்தி மையங்கள் உணரவைப்பதே.அதை புலம்பெயர் தமிழர்கள் செய்து வருகிறார்கள்.

வெண்ணெய் திரளும் போது தாளியை உடைத்த கதையாக தமிழ் காங்கிரஸ் தலைபட்டுள்ளது. கூட்டமைப்பு இந்திய நிகழ்சித் திட்டத்திற்கு என்றால் ஏன் வரதராஜப் பெருமாளை இந்தியா களமிறக்க வேண்டும். ஏன் பரந்தன் ராஜன் படையை களமிறக்க வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களே! சிந்தியுங்கள்.

இரண்டு தசாப்தங்களாக மூன்று ஜனாதிபதிகளுடன் இணைந்த நுPனுP இன்று வெற்றிலைக் கடை வைக்க ஓரங்கட்டப்பட்டுள்ளது. அனைத்துலக சுகங்களையும் அனுபவிக்க வைத்தபின் கருணா என்ற முரளீதரன் அரசியலிலிருந்து முற்றாக ஓரங்கட்டப்ட்டுவிட்டார்.

ஒட்டுக் குழுக்கள் இனி தேவையில்லை என்பதை ராஜபக்ச அரசு தெளிவாக உணர்த்திவிட்டது. ஒட்டுக் குழுக்களின் வசந்தம் முடிந்துவிட்டது. இந்த இடியப்பச்சிக்கல் நிலையில் நிதானமாக யாதார்த்தமாக சந்தர்ப்ப நலன் பேண் நகர்வுகளை முன்னெடுத்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம்.அது கொள்கையை விட்டு விலகுவது என்பதல்ல. குறித்த சந்தர்ப்பத்திற்கேற்ற நகர்வு மட்டுமே.

ஈழத்தமிழர் எதிர்காலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வலுவிலேதான் தங்கியுள்ளது. அவர்கள் வலுவாக இருந்தால் தான் புலம்பெயர் தமிழ் நகர்வுகளும் வெற்றிகாண முடியும். ஆக, 8ஆம்திகதி ஒவ்வொரு தமிழ் உறவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கேசம்பந்தர் அணிக்கே வாக்களித்து ஈழத் தமிழர்களைக் காக்க வழிவகுக்க தவறாதீர்கள்.

ஆ.தேவராஜன்
செயலாளர்
இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் நியூஸ்லாந்து

0 Responses to ஈழத் தமிழ் பெருமக்களே! நீங்களே உங்களுக்குக் குழி பறிக்க வேண்டாம்..

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com