Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதற்காக? இத்தேர்தலை நடத்தும் நோக்கம்

நாட்டிலே இன்று உருவாகியிருக்கின்ற புதிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் பிரான்சில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பினை புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற வகையில் வளர்த்தெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

இந்த அரசியல் கட்டமைப்பு பிரான்சில் வாழுகின்ற தமிழீழ மக்களை அரசியல் வேலைத்திட்டங்களுக்கு உரிய முறையில் நிறுவனரீதியாக வளர்த்தெடுத்து தாயகத்திலே எமது மக்கள் நியாயமான போராட்டத்திற்கு தமிழர் அல்லாத மக்களின் தார்மீக ஆதரவை வென்றெடுப்பதுவும், இந்த நாட்டின் அதிகார பீடத்தோடு தொடர்ச்சியான திட்டமிட்ட வேலைத்திட்டத்தூடாக அவர்களின் ராஐதந்திர ரீதியான ஆதரவை வென்றெடுத்து செயற்படுவதற்கும் உரிய முறையில் நேர்த்தியாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.

வரப்போகும் தமிழீழ மக்கள் பேரவைத்தேர்தலில் உங்களையும் பிரதிநிதிகளாக்கி கொண்டு இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எமது சனநாயக கட்டமைப்பின் மூலம் உருவாக்கம் பெறும் தமிழீழ தேசிய அமைப்புக்களின் மூலம் எமது தேசத்தை வலியுறுத்துவோம்.

வாக்களிக்கத் தகுதியுள்ளோர் யார்?

16 வயதிற்கு மேற்பட்ட பிரான்ஸில் வாழும் புலமபெயர் தமிழீழமக்கள் அனைவரும் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்.

ஆணோ,பெண்ணோ ஈழத்தமிழராயின் அவர் குடும்பம் வாக்களிக்கும் தகுதியுடையது.

கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் ஏதாவதொன்றின் மூலப்பிரதி காண்பித்தல் வேண்டும்.

எப்போது?

மே 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் இரவு 20.00

இத் தேர்தல் நடைபெறப்போகும் இடம்

மாநில அதிகாரபீடத்திற்குட்பட்ட பிரதேசங்களிலும், வாக்குசாவடிகள் மாநகர ரீதியாகவும் வைக்கப்படும.

தொடர்பு: திரு 0615884221 பாலா 0614114610

0 Responses to பிரான்சு தமிழ் மக்களவைக்கான தேர்தல்: அறிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com