நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினமான தமிழ் மக்கள் காலம் காலமாக பல இன்னல்களை அனுபவித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கென ஒரு தமிழ் பிரதிநிதியை வரவிடாது தடுக்க பல்வேறு தரப்பினர் சுயேட்சைக்குழுக்களாகவும் கட்சிகளிலும் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கத் திட்டமிட்டனர்.
ஆனால், அத்தகையவர்களுக்கு தன்மானமுள்ள தமிழ் மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர்.
இந் நிலையில் இத்தகையவர்கள் அனைத்தையும் உணர்ந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு இனியும் இவ்வாறான செயலில் ஈடுபடக்கூடாது.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க கசப்பணர்வுகளை மறந்து எம்மோடு இணைந்து ஒரு குடையின் கீழ் செயற்பட முன்வரவேண்டும்.
பல்வேறு அடாவடித்தனங்களின் மத்தியில் தமிழினத்தின் வெற்றிக்காக செயற்பட்ட கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் மற்றும் தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் பொ.பியசேன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



0 Responses to தன்மானத்தை மீண்டும் நிரூபித்த அம்பாறை தமிழ் மக்கள்: பியசேன