பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேற்று இரவுவரை அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.அழைப்புக் கிடைத்தவுடன் அது குறித்து பொறுப்புணர்ச்சியுடனும் ஆக்க பூர்வமாகவும் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மக்களின் எதிர் பார்ப்புக்கு அமைய இலங்கையைக் கட்டி யெழுப்புவதற்காக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பகி ரங்க அழைப்பு விடுத்திருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டில் வைத்து இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இந்த நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக் காக நாட்டை கட்டிஎழுப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் உட் பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஜனாதிபதியுடன் இணைய வேண்டு மென்று அவர் கேட்டிருந்தார்.
எனினும் நேற்றிரவுவரை உத்தியோக பூர்வமாக இதுகுறித்த அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் உயர்வட்டாரங்கள்தெரிவித்தன.
பேச்சுக்கு வருமாறு அரசிடமிருந்து எழுத்து மூலமான அழைப்பு வந்தால், நாடாளுமன்றக் குழு கூடி பொறுப்புணர்ச் சியுடன் முடிவு எடுக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
அழைப்புக் கிடைத்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடி அது குறித்து ஆக்கபூர்வமாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் பரிசீலித்து முடிவு எடுக்கும். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு தமிழ்ப் பேசும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகவும் அவற்றை உத்தரவாதப்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றல் ஆகிய கொள்கைகளில் உறுதியாகவும், தீவிரமாகவும் அவற்றைச் செயற்படுத்தும் விதத்தில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.



0 Responses to பேச்சுக்கு அழைப்பு இல்லை வரும் பட்சத்தில் பொறுப்புடன் பரிசீலிக்கப்படும்: சம்பந்தன்