நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்கூடிய அரசாங்கம் ஒன்றை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமைத்துக்கொள்வது மட்டுமன்றி எதிர்க் கட்சிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் பலமான எந்தவொரு எதிர்க்கட்சியும் இல்லாத நிலமையும் ஏற்படக்கூடும்.தற்போதைய அரசியலமைப்பை மாற்றி அமைப்பதன்மூலம் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புக்களின்றி ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளராக ராஜபக்ச மாறுவது மட்டுமன்றி அவருக்குப் பின்னர் ஆட்சி இயல்பாகவே அவரது மூத்த மகனின் கைகளைச் சென்றடையும். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாகவுள்ள இன்னொரு மியன்மாரைத் தடுப்பதே தற்போதுள்ள பாரிய சவாலாகும்.
இந்த சிறிய நாடு ஒப்பீட்டு ரீதியில் அதைவிடப் பல மடங்கு பாரிய இராணுவப் படையைக் கொண்டுள்ளது. இராணுவ மயப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் படிப்படியாக அரசியல், சட்ட, பொருளாதார மற்றும் சமூக உறவுகள் தொடர்பான கொள்கைகளைத் தன் வழிக்குக் கொண்டுவந்து சனநாயக முறைமையையே பிரதியீடு செய்துவிடுவதால், இராணுவ மயப்படுத்தல் என்பது மிகவும் ஆபத்தானதாகும்.
அது எமது மனிதாபிமானத்தை நலிவடையச் செய்கிறது. இராணுவ மயப்படுத்தப்பட்ட சமூகங்கள் வேகமாக பொதுமக்கள் கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்கின்றன. ஆட்சியாளர்களால் அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு அங்கு எதுவும் இல்லை.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில், நாடுகளின் அதிகாரம், பணம், மோசடி, பொய்யான வாக்குறுதிகள் மற்றும் வம்சாவழி அரசியல் ஆகியன உண்மையான சனநாயகத்தை இல்லாது செய்துவிடுகின்றன. காவல் துறை, ஆயதப் படைகள் மற்றும் நீதித் துறை ஆகியன அரச தலைவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தேர்தல் ஆணையாளர் தனது கட்டளைகளை காவல் துறை ஊடாக நிறைவேற்ற முடியாது. இந்த மாதிரியான ஆட்சி முறைக்குப் பழக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தில் மாறியே ஆகவேண்டும்.



0 Responses to தெளிவற்றுத் தெரியும் இலங்கையின் எதிர்காலம்