பக்க வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாடமுடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதேவேளை, இவரை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னியரசு உட்பட தமிழின உணர்வாளர்கள் பலர் சென்னை விமான நிலையம் அருகே நேற்று இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து அவர் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இது இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டுச்சதி என்றும் தெரிவித்துள்ளது.
0 Responses to தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்