Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் சமபிரஜைகளாக மதிப்பளிக்கப்பட்டு இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று, 'பேசப்படாத இனப் படுகொலைகள், இலங்கையில் போர்க் குற்றங்கள்'' என்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நீதியரசர் சச்சர் இதனைத் தெரிவித்ததாக 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினராக சச்சர் உள்ளார். இலங்கை தமிழர் இன அழிப்பு தொடர்பாக தனது அறிக்கையை மக்கள் நீதிமன்றம் சமர்ப்பித்திருக்கிறது. இப்போது தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதே இலங்கைத் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அங்கு மனித உரிமைகள் பேணப்படவில்லை என்றும் சச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்ற கருத்தை நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் முன்வைத்திருக்கிறார். தனது உடல்நிலை காரணமாக கிருஷ்ண ஐயர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை ஆயினும் அவர் ஒளிநாடா செய்தியை மாநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் சமஷ்டி முறைமையை உள்வாங்குவது தொடர்பாக கிருஷ்ண ஐயர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சகல விடயங்களிலும் தமிழர்கள் தமக்குரிய பங்கினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகையில், தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதி முகாம்கள் சட்ட விரோதமான சிறைச்சாலைகளே தவிர வேறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கைத் தமிழர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்கிறார் இந்திய நீதியரசர் ரஜிந்தர் சச்சர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com