நான்காயிரம் படையினரின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டு வருகின்றன.
வீடுகளை அமைப்பதற்கென கொண்டு செல்லப்பட்டுள்ள பொருட்களைப் பாதுகாக்கவென பொருட்களுக்கு மிக அருகில் இராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாங்குளம் தொடக்கம் கரிப்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான் வரையான பகுதிகளை மையப்படுத்தி ஆயிரம் சிங்களக் குடியேற்றங்கள் முதற் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை தெரிந்ததே.
இதனைவிடவும் முல்லைத்தீவின் நாயாறை அண்மித்த கடற்கரைப் பகுதிகளில் சிங்களவர்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்து மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருவதாகவும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.





0 Responses to வன்னிநிலத்தில் சிங்கள குடியேற்றங்களுக்கு பொருட்கள் குவிப்பு (படங்கள் இணைப்பு)