Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் அல்லது நால்வர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளரும், உல்லாசப் பயணத்துறையின் மேம்பாட்டு அமைச்சருமான பசீர் முஸ்தபா ஒழுங்கு செய்திருந்த மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் போதே அவர் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.
தாயகம், சுயாட்சி மற்றும் பிரிவினைவாதம் குறித்து சில சக்திகள் இன்னமும் கருத்துத் தெரிவித்து வருவதாக இச்சந்திப்பில் குறிப்பிட்ட அவர், நாட்டில் பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் முன்னிலைப்படுத்தும் அரசியல் கட்சிகளைத் தடை செய்யும் சட்டம் அடுத்த நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

அத்துடன், ஆளுமைமிக்க, அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யக்கூடிய வகையிலான ஆலோசனைகளை வழங்குமாறும் மகாசங்கத்தினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தமை ஒரு பாரதூரமான விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பா.அரியநேந்திரன் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to விடுதலைப் புலிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி: கோத்தபாய

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com