Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென் தமழீழத்தில் தமது பணிகளை மேற்கொள்வதில் பரிய சவால்கள் எதர்நோக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

வட தமிழீழத்தில் போரின் பின்னர் மேற்கொள்ளப்படும் பணிகளின் அதிகரிப்புக் காரணமாக தென் தமிழீழத்தில் உள்ள மக்களின் தேவைகளை முழுமையாகத் தம்மால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனவும், நிதி, ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும், உலக சுகாதார அமைப்பின் அவசர உதவிகளுக்கான தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பதிகாரி எட்வின் சல்வடோர் தெரிவித்துள்ளார்.

தென் தமிழீழத்தை சிறீலங்கா படைகள் 2007ஆம் ஆண்டில் ஆக்கிரமித்தபோது இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் இதுவரை முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட தமிழீழத்திலும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை காரணமாக பன்னாட்டு தன்னர்வ தொண்டு அமைப்புக்கள் தமது பணிகளை திறம்படச் செய்ய முடியாது திணறி வருகின்றன.

வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் தேவைகளை சிறீலங்கா அரசு பூர்த்தி செய்யாத நிலையில், ஒரு சில கூரைத்தகடுகளை மட்டும் தொண்டு அமைப்புக்கள் வழங்கியுள்ளன.

0 Responses to தென் தமிழீழத்தில் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் - உலக சுகாதார அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com