Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமை ஆர்வலரும் மூத்தசட்டத்தரணியுமான திரு.எம்.கருபன் அவர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்வதி அம்மா திருப்பியனுப்பப்பட்டது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இதற்கான விளக்கத்தினை திரு.கருணாநிதி அவர்களும் இந்திய மத்திய அரசாங்கமும் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதன்போது திரு கருபன் அவர்கள் நீதிமன்றத்திடம் திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அவர்களை சென்னைக்கு விசேட விமானத்தில் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் இதன்மூலம் சர்வதேச ரீதியில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டு முழுத்தமிழருக்கும் ஏற்பட்ட அவப்பெயரை நீக்க முடியும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்பின் திரு கருபன் அவர்கள் ஊடகர்களிடம் பேசியபோது திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அவர்களை திருப்பி அனுப்பியமை தமிழ்நாட்டில் உள்ள முழத் தமிழர்களின் உள்ளங்களையும் காயப்படுத்தியுள்ளது எனவும் தனிப்பட்ட கருணாநிதி அவர்களின் இவ் நடவடிக்கை முழுத் தமிழர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

0 Responses to சென்னை உயர் நீதிமன்றம் தேசியத்தலைவரின் தாயாரை திருப்பி அனுப்பியதற்கு விளக்கம் கோரியுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com