இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசு திட்டமிட்ட முறையில் விடுதலைப்புலிகளின் நினைவாலயங்களை அழித்து வருகின்றது. விடுதலைப்புலிகளின் மிக முக்கிய தளபதிகளின் நினைவாலயங்கள் அனைத்தையும் அரசு அழித்து வருகின்றது.
அதனை சிறீலங்கா அரச தலைவர் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும். 1987 ஆம் ஆண்டு பலாலி இராணுவ முகாமில் இந்திய படையினரின் பாதுகாப்பில் இருந்த சமயம் கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்த 12 விடுதலைப்புலிகளின் நினைவாலயங்களையும் நேற்று இரவு படையினர் அழித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நல்லூர் பகுதியில் அமைந்திருந்த திலீபனின் நினைவு மண்டபமும் சில வாரங்களுக்கு முன்னர் அழிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. அதன் முன்பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.
மக்களுக்காக உயிர்நீத்தவர்களுக்கு நினைவாலயங்கள் கட்டி நினைவுகூருவது தமிழ் மக்களின் கலாச்சாரம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to புலிகளின் நினைவாலயங்களை அழிப்பதை அரசு நிறுத்தவேண்டும்