Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த மார்ச் மாதம் 1ம் திகதியிலிருந்து 26ம் திகதிலரை ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த .நா. மனித உரிமை சபையின் 13வது கூட்டத் தொடரில் வழமை போல் சிறீலங்காவின் நிலை துன்பத்திற்குள்ளாகியது.

.நா. மனித உரிமைச் சபையில் சிறீலங்காவின் நிலை பற்றி பேசும் போது பெரும் பான்மையான தமிழீழ மக்களுக்கு அங்கு நடைபெறுபவை எவையும் திருப்தி கொடுப்பதாக இல்லை. காரணம் ஒரு மாபெரும் அவலம் எமது இனத்திற்கு நடந்துமுடிந்த பின்னரும் .நா. இன்னும் சரியான முறையில் தமிழீழ மக்களின் அவலங்களுக்கோ அல்லது ஒரு நிரந்தர அரசியல் தீர்வுககோ குரல் கொடுக்க தவறுவதே!

ஆனால் .நா. மனித உரிமைச் சபையில் தன்னும் ஒன்றுமே முயற்சி செய்யாத விடத்தில், வேறு .நா விற்கான சபைகளில் சிறீலங்கவின் விடயம் தற்பொழுது கவனத்திற்கு எடுக்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக் குறியகவே இருந்து வருகிறது.

ஆகையால் கடந்த 13வது கூட்டத் தொடரில் நடைபெற்றவற்றை இங்கு மிக சுருக்கமாக தருகிறேன்.

இவ் 13வது கூட்டத் தொடருக்கு பெல்ஜியத்தின் தூதுவர் திரு. அலக்ஸ் வன்ழவன் தலைமை தாங்கினர். வழமைபோல் தமிழர் மனிதர் உரிமை மையத்தினால் மனுவுடனான அறிக்கையொன்று வெளியிடப்பட்டு இக் கூட்டத் தொடரில் பங்கு பற்றியோருக்கு விநியோகிக்கப்பட்டது.

சிறீலங்காவின் மனித உரிமை நிலை பற்றி .நா. மனித உரிமை ஆணையாளார் திருமதி நவநீதம்பிள்ளை தனது உரையில் சிறீலங்கா ஒரு சர்வதே மனித உரிமை கண்காணிப்பு குழுவை ஏற்க வேண்டுமென வற்புறுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு உரையாற்றி .நா. மனித உரிமைக்கான நிபுணர்கள்இடப்பெயர்வு, காணாமல் போதல,; சித்தரவதை, மனித உரிமையாளரின் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பொறுப்பானவர்கள், சிறீலங்காவில் மேற்கூறப்பட்ட விடயங்களின் நிலைகளை மிகவும் கடுமையாக கண்டித்தது மட்டுமல்லது நிலைமைகள் மிக மோசமாவதாகவும் எடுத்துரைத்தார்கள்.

இதேவேளை .நா. அங்கத்துவ நாடுகள் விசேடமாக ஜரோப்பிய ஒன்றியம் சார்பாக ஸ்பெயின், அத்துடன் சுவீடன், ஜேர்மானி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் சிறீலங்காவின் மனித உரிமை நிலையை மிகவும் கடுமையாக கண்டித்ததுடன் இடம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் நிலை, அரசியல் கைதிகள் நிலை போன்றவற்றை எடுத்துரைத்தனர்.

இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பாக பல அமைப்புகள் சிறிலங்கா நிலையை எடுத்துரைத்தனர். இவற்றில் விசேடமாக சர்வதேச கல்வி நிறுவனம் சார்பாக திருமதி கரன் பார்க்கர், ஆசிய அமைப்பு, ஆசிய மனித உரிமை ஆணைக்குழு, மனித உரிமை கண்கணிப்பு குழு, மிராப், இமடார் போன்றவை அடங்கும்.

இக் கூட்டத் தொடரில் கொழும்பிலிருந்து வருகை தந்த சில அரச சார்பற்ற நிறுவனாங்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டு சிறிலங்காவில் நடைபெறும் பல உண்மை நிகழ்வுகளையும் எடுத்துரைத்தனர்.

இக் கூட்டத் தொடரின் இடைவேளேயின் பொழுது, பல மேற்கு நாடுகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (.சி.சி) யின் தற்போதைய தலைவர் தென்கொரியவைச் சேர்ந்த திரு சோங் என்பவர் கலந்து கொண்டு பல நாடுகள் பற்றிய வினாக்களுக்கு பதில் கூறினார்.

இதேவேளை, கிழக்கு தீமோரின் ஜனதிபதி திரு ராமோஸ் கோட்டா அரசசார் பற்ற பிரதிநிதிகளுடன் நீண்ட உரையாடல் ஒன்ற நடத்தியிருந்தார்.

ஆகையால் சிறீலங்காவினால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள் இடப்பெயர்வுகள் போன்றவை .நா. மனித உரிமைச் சபையில் தொடர்ந்து பிராஸ்திக்கப்படுவது மட்டுமல்லாது, சிறீலங்காவில் ஊடக சுதந்திரம், தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள் நிலை வடக்கு கிழக்கில் இன்றும் நடமாடும் ஒட்டுக் குழுக்கள் பற்றி இன்றும் விமர்சிக்கபடுகிறது.

முன்பு இச்சபையில் சிறீலங்கா விடயத்தில் குரல் கொடுத்து வந்த ஆவுஸ்திரேலியா, கனடா, சுவிற்சாலந்து ஆகிய நாடுகள் இவ் கூட்டத் தொடரில் மௌனத்தை கடைப்பிடித்தது மிக வியப்பான விடயம். இது பற்றி இவ் நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்வது மிக அவசியம்.

ஈழமுரசு

0 Responses to ஐ.நா. மனித உரிமை சபையின் 13வது கூட்டத் தொடரும் சிறீலங்காவின் நிலையும்: கிருபாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com