தமிழ் மக்களை படுகொலை செய்த மகிந்த ராசபக்சவின் கைப்பொம்மையாக செயற்படுபவரும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் சிறுமிகளை கடத்தி படுகொலை செய்த பிள்ளையானுக்கும் அவரது குழுவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பத்திரிகையாளரும், ஆசிரியருமான காரைதீவைச்சேர்ந்த வி.ரி.சகாதேவாராசா கேட்டுள்ளார்.காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் படுகொலைகளைப்புரிந்த பிள்ளையானுக்கு வி.ரி.சகாதேவராசா பொன்னாடை போர்த்தினார். பிள்ளையானுக்கு காரைதீவில் பொன்னாடை போர்த்திய சம்பவம் தன்மானம் உள்ள காரைதீவு மக்களுக்கு வேதனையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சில சலுகைகளுக்காக சகாதேவராசா போன்றவர்கள் காரைதீவு மக்களையும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களையும் அடகுவைப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று காரைதீவில் உள்ள பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
பிள்ளையானுக்கு பொன்னாடை போர்த்திய சகாதேவராசா அம்பாறை தமிழர் மகாசபை பிள்ளையானுக்கு ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார். இதனை தமிழர் மகாசபை வன்மையாக கண்டித்துள்ளது.



0 Responses to சிறுமிகளை கடத்தி படுகொலை செய்த பிள்ளையானுக்கு பொன்னாடை