Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கரைநகர் வலந்தலைச் சந்தியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தமது வாகனங் கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் ஆதர வாளர்கள் தாக்கப்பட்டதாகவும் .தே. கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச .பி.டி.பி. பொறுப் பாளர் தலைமையில் வந்த குழுவினரே தாக் குதல் நடத்தினர் எனக் கடற்படையின ரிடம் தாம் முறைப்பாடு செய்துள்ளதாக வும் அவர் உதயனுக்குத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து திருமதி விஜய கலா மகேஸ்வரன்அராலி தெற்கில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் எமது ஆதரவாளர்களுடன் காரைநகர் நோக்கிச் சென்றேன். பொன்னாலைப் பாலம் கடந்து வலந்தலை சந்திக்குச் சென்று அங்கு நின்று, கூட்டம் நடத்துவது பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளி லும், ""பிக்கப்'' வாகனத்திலும் வந்த .பி.டி.பி. பொறுப்பாளர் தலைமையி லான கோஷ்டி ஒன்று எம்மைத் தகாத வார்த்தைகளால் ஏசியது. பின்னர் பொல்லு கள், பிஸ்ரல் ஆகியவற்றைக் காட்டி அச் சுறுத்தியது. எமது ஆதரவாளர்களைத் தாக் கியது.

அதுமட்டுமன்றி எமது வாகனங்களின் திறப்புக்களைப் பறித்துச் சென்றது. வாக னக் கண்ணாடிகளை அடித்து நொறுக் கியது.

இது குறித்து கடற்படை அதிகாரிகளுக் குத் தகவல் கொடுத்ததன் பேரில் கடற் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அமைதியை ஏற்படுத்தினர் என்றார்.

இதேவேளை தமது அராலிக் கூட்டத்தில் பங்குபற் றிய இரு ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சங்கானையில் வழிமறித்த .பி.டி.பி.யி னர் அவர்களைத் தாக்கியதுடன் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளைச் சேதப்படுத்தியதாகவும் வேட்பாளர் விஜய கலா மகேஸ்வரன் உதயனுக்குத் தெரி வித்தார்.

0 Responses to காரைநகரில் ஐ.தே.க. முதன்மை வேட்பாளரின் வாகனங்கள் ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்டன!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com