Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்து முடிந்து விட்டது. இன்று முடிபுகள் வெளியாகும் நிலையில் எவரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறந்தள்ளியுள்ளனர். அதிலும் யாழ்.மாவட்டத்தில் வாக்களிப்புப் பதினெட்டு வீதத்தைக் கூடக் கடக்கவில்லை. அப்படியானால் மக்கள் எடுத்த முடிபு என்ன வெனில்,

எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. நாங்கள் எங்கள் பாட்டில் இருப்போம். உங்களுடைய வெற்றுக் கோ­சங்களையும், பசப்பு வார்த்தைகளையும் நம்பிக் கெட்டது போதும்.

பெற்ற பிள்ளையை, கட்டிய வீட்டை, சொந்த மண்ணை என எல்லாவற்றையும் இழந்து கண்ணீர் வடிக்கும் நேரத்தில், நீங்கள் கூத்தாடுகின்றீர்கள்.இனிமேல் இந்தப் பக்கம் வராதீர்கள் என்று துரத்துவது போல மக்கள் நடந்திருக்கின்றார்கள்.

அடேங்கப்பா! மக்கள் யாரோடும் யாரும் கதைக்கவில்லை. தேர்தலைப் புறந்தள்ளுங்கள் என்று எந்த அமைப்பும் கூறவில்லை. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்துத் தேர்தலைப் புறந்தள்ளிவிட்டனர்.இது அதிசயமான உண்மை. நாங்கள் முன் கூட்டியே இவ்விடத்தில் தெரிவித்திருந்தோம். ஏழு பிறப்பெடுத்தாலும் யாழ்ப்பாண மக்களை அறிய முடியாதென்று. புரிகிறதா இப்போது?

அன்புக்குரியவர்களே! மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். அவர்களின் மனநிலையை அறிய வேண்டும். தமிழ் மக்கள் கைலாயம் காண்பதற்காகப் புறப்பட்டவர்கள். கைலாய இன்பத்திற்காக அவர்கள் இழந்ததும் பறிகொடுத்ததும் ஏராளம்; ஏராளம்.

யாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். கைலாய தரிசனம் கிடைக்கும் என்பதற்காக- ஆனால் தரிசனம் கிடைக்காதென்றாகி விட்ட போது நீங்கள் வெற்றுத் தாளில் வெறும் கோடு கீறி கைலாயம் காட்டுகின்றீர்கள்.

இதுவரை நம்பினோம். இனிமேல் நம்ப முடி யாது. எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. ஆனால் உங்களுக்கு வாக்களிக்க நாங்கள் விரும்பவில்லை என்றவாறு தமிழ் மக்களின் தீர்ப்பு அமைந்துள்ளது.

அவர்களின் தீர்ப்புக்குத் தலை வணங்குவோம். எங்கள் மனச்சாட்சியும் ஏற்றுக் கொள்ளாத வாக்குறுதிகளையளித்து மக்களை ஏமாற்ற நினைத்த பாவம் தீர்க்க வாருங்கள் வேட்பாளர் களே கங்கையில் நீராடி காசியில் பிரதட்சணம் செய்வோம். என்ன யோசிக்கின்றீர்கள்? உங்களை விட ஊடகவியலாளர்கள் நாங்கள் செய்த விடுப்புகள், விண்ணாணங்கள், படுபாதகங்கள் ஏராளம்.வாருங்கள் காசியில் குதிப்பம். நீந்திக் கரை சேரா விட்டாலும் எங்களுக்கு முத்தி. தமிழ் மக்களுக்குப் பேரின்பம்.

0 Responses to வாருங்கள் கங்கையில் நீராடி காசியில் பிரதட்சணம் செய்வோம்: வலம்புரி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com