Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியல் கோட்பாடுகளை தொடர்ந்தும் தமிழ் மக்கள் நம்பத்தயாரில்லை என்பதை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குபதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு அரசியல்ரீதியாக எதையும் பெற்றுத்தந்ததும் இல்லை தரப்போவதும் இல்லை என்பதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள.

இன்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இதுவரைகாலமும் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத் தந்ததும் இல்லை பெறபோவதும் இல்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போதான தமிழ் மக்களின் வாக்குப்பதிவுகள் வெளிக்காட்டியுள்ளன.

சிங்கள அரசுகளினாலோ அல்லாது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோ தமிழ்மக்களின் தீர்வினை பெற்று தரபோவதில்லை. வதை முகாம்களில் மக்கள் அடைபட்டுகிடக்கும்போது மக்களை சென்று பார்வையிடமுடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பினரால் தற்போது தமிழ்மக்களின் பிரச்சனைகளை பெற்றுக்கொடுக்க போவதில்லை என்பதனை நன்கு அறிந்த தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசினதும் அரசியல் கட்சிகளினதும் அரசியல் கோட்பாடுகள் செல்லுபடிஅற்றவை என்பதனை வடக்கு கிழக்கில் பொருந்தொகையாக வாக்களிக்காத தமிழ் மக்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

266975 வாக்காளர்களை கொண்ட வன்னிமாவட்ட தேர்தல் தொகுதியில் 106977 வாக்குகள் அளிக்கப்பட்டமையும்,721359 வாக்காளர்களை கொண்ட யாழ்மாவட்டத்தில் 148503 வாக்காளர்கள்தான் வாக்களித்துள்ளார்கள்.333644 வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 180618 வாக்காளர்கள் வாக்களித்துள்ளமையும்,145479 வாக்களர்களினை கொண்ட அம்பாறை தேர்தல் தொகுதியில் 84599 வாக்காளர்கள் வாக்களித்துள்ளமையினையும் எடுத்துக்கொள்ளும் போது திருகோணமலை மாவட்டம் இதுவரை வெளிவரவில்லை.

அரசியல் கட்சிகளின் அரசியல் கோட்பாடுகளை தமிழ்மக்கள் தொடர்ந்தும் ஏற்க தயாரில்லை என்பதனை வெளிகாட்டியுள்ளது.பல்வேறு பட்ட தேர்தல் மோசடிகளும் வன்முறைகளுக்கும் மத்தியில் ஸ்ரீலங்காவின் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளமையினை தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

0 Responses to சிறீலங்கா நாடாளுமன்றம் தமிழ்மக்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com