இந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க தோல்வி அடைந்துள்ள போதும் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து பதவி விலகப்போவதில்லை என ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.தே.கவின் தேர்தல் தோல்விக்கு தேர்தல் விதிமுறைகள் தான் காரணமே தவிர, கட்சியின் தலைமை அல்ல. உரிய நேரம் வரும்போது நான் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன்.
பெரும்பாலான மக்கள் வாக்களிப்பததை தவிர்த்துக் கொண்டது அவர்கள் அரசுக்கு ஒருமித்த ஆதரவுகளை வழங்கவில்லை என்பதையே காட்டுகின்றது. வழமையாக நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணளவாக 75.9 விகித மக்கள் வாக்களிப்பதுண்டு. ஆனால் தற்போது 56 விகிதமான மக்களே வாக்களித்துள்ளனர்.
போர் நிறைவடைந்த பின்னர் மக்கள் தேர்தலில் நம்பிக்கை இழந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். பொதுமக்களின் உரிமைகளையும், ஊடகங்களின் சுதந்திரங்களையும் காப்பாற்றுவதற்கு அனைத்துலக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.



0 Responses to தேர்தலில் ஐ.தே.க தோல்வியடைந்தாலும் நான் பதவி விலகப்போவதில்லை: ரணில்