புலிகளின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மரபுகள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும் எனவே அவற்றை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐhதிக ஹெல உறுமியவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை புலிகள் ஆக்கிரமித்திருந்தனர். இக் காலப் பகுதியில் அப்பிரதேசங்களுக்கு இலங்கை அரசின் பிரதிநிதிகளாலோ அல்லது ஏனைய தரப்பினராலோ செல்ல முடியாமல் இருந்தது.
ஆனால், தற்போது உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு சுதந்திரமாக செல்லக் கூடிய சூழல் காணப்படுகின்றது. புலிகளின் ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் வட,கிழக்கில் அழிக்கப்பட்டவை ஏராளம்.
அவை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டபோது பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.குறிப்பாக வடக்கில் மன்னார், அடம்பன் பூநகரி, பரந்தன், புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, நந்திக்கடல், துணுக்காய், அம்பகாமம் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களில் நாம் மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வுகள் மூலம் பௌத்த பாரம்பரியம் காணப்பட்டதற்கான பௌதீக தடயங்கள் கிடைத்துள்ளன.
பௌத்த விகாரைகளை புலிகள் அழித்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள் எமக்குக் கிடைத்துள்ளன.இலங்கையில் தமிழ் மன்னர்கள் காணப்பட்டனர். ஆனால், அவர்களுக்கென்று பூர்வீக நிலப்பரப்பு எதுவும் இலங்கையில் காணப்படவில்லை. பல்வேறு படையெடுப்புகள் மூலமான ஆக்கிரமிப்புகளே காணப் பட்டுள்ளன. புலிகளின் காலத்திலேயே இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகமாக உரிமை கோரப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் எமது ஆய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
0 Responses to வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பூர்வீகம் என்பதற்கான போதுமான வரலாற்று சான்றுகள் கிடையாது