Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐநாவின் இரட்டைபோக்கு தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பில் நிபுணர்குழு அமைப்பதற்கு ஒன்பது மாதங்களும் ஐக்கிய இராச்சியத்தின் ஈராக் மீது மேற்கொண்ட போர் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு ஒன்பது வருடங்களும் செலவிடப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

இதுதொடர்பில் றோகித போகல்லாகம மேலும் தெரிவிக்கையில் ஐநாவின் செலயர் அவர்கள் சிறீல்காவிற்கு தனது பிரச்சனை தொடர்பில் தெரிவிப்பதற்கு மேலும் காலம் வழங்கியிரக்கவேண்டும் என்றும் தாம் 2009 ம் ஆண்டு பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளதாகவும் தற்போது ஏப்ரல் 2010 எனவும் ஐநா செயலளர் அவர்கள் ஒன்பது மாதத்திற்கு இவ்வாறு நிபுணர்குழுவை அமைப்பது கசப்பானது எனவும் பிரித்தானிய ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், படைகளை அங்கு ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரிக்க ஒன்பது ஆண்டுகள் வழங்கியிருந்ததாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

பொதுதேர்தலுக்கு முன்பாக இவ்வாறான நடவடிக்கையினை ஏன் ஐநா செயலார் மேற்கொண்டார் எனவும் அது தமக்கு கவலை அளிப்பதாகவும் தாம் இவ் நடவடிக்கையினை எதிர்பதாகவும் அது தேவையற்ற ஒன்று என்றும் அதனை செயல்படுத்துவதற்குரிய நேரம் இதுவல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடும்போது ஐநா செயலர் பாதுகாப்பு சபையில் இதுதொடர்பில் அனுமதி பெறப்பட்டிருக்கவேண்டும் எனவும் இதனை ஐநா செலயர் இதனை மதிப்பார் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐநாவின் மீது சிறீலங்கா குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com