Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வட்டுக் கோட்டைத் தீர்மானத்தைக் கைவிட்டு விட்டார்கள் எனச் சிலர் குற்றம் சாட்டு கின்றனர். என்ன அடிப் படையில் அவர்கள் இப் படிக் கூறு கின்றனர் எனப் புரியவில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானம் அது இயற்றப்பட்ட காலத்தில் எப்படி இருந் ததோ அப்படியே தான் இப்போதும் இருக்கின்றது என தெரிவித்தார் முன்னாள் மாநகர சபை ஆணையாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமாகிய சி.வீ.கே.சிவஞானம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரை யாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:


ராஜீவ் ஜே.ஆர். இந்திய, இலங்கை ஒப்பந்தந்தை அடுத்து உருவாக்குவதற்கு விடுதலைப் புலிகள் தீர்மானம் எடுத்த போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைக் கைவிட்டுட்டுத்துத் தான் அப்படித் தீர் மானித்தார்கள் என யாராவது கூற முடி யுமா?

அதேபோல, ISGA என்ற இடைக் காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனையை முன்வைத்தபோதே அல்லது PTOM என்ற சுனாமிக் கட்டமைப்பு உரு வாக்கத்துக்கான யோசனையை முன்வைத்தபோது வட்டுக்கோட்டைத் தீர் மானத்தைக் கைவிட்டுட்டுத்தான் விடு தலைப்புலிகள் அவ்வாறு செயற்பட்டனர் என யாராவது கூறமுடியுமா?

எனவே இந்த விடயத்தை ஒரு பிரச்சினையாக்கி அரசியல் செய்யமுடியாது. இந்த விடயத்தில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இருதேசம், இரு நாடு என்று பேசப் படுகின்றது. இந்தக் கோட்பாட்டை நாம் கைவிட்டுவிட்டோம் என்றும் கூறப்படுகின்றது. 1991 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீர்மானத்தின்படி அப்போதைய ஜனாதிபதி பிறேமதாஸாவை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது "ஒரு நாட்டில் நாம் இரு தேசியங்கள்'' என நான் தெளிவாக அவருக்கு எடுத்துக் கூறி னேன். இந்த நிலைப்பாட்டில் இதுவரையிலும் இனியும் எந்த மாற்றமும் இருக்க முடியாது. இதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து துரதிஷ்டவசமாகப் பிரிந்து சென்றவர்கள் உருவாக்கிய இரு அணிகளின் பெயர் களும் கூடத் "தமிழ்த் தேசியம்"என்ற பதத்தையே கொண்டுள்ளன. "தமிழ்த் தேசியம்" என்ற கொள்கையை அல்ல. என்னைப் பொறுத்தவரை எமது நிலைப் பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு போலிக்கதை கூறுபவர்களின் கூற்றுக்குத் தமிழ்மக்கள் ஒருபோதும் செவிசாய்க்கமாட்டார்கள். அவர்களுக்கு உண்மைநிலை புரியும். சிந்தித்துச் செயற்படுபவர்கள் நம் தமிழர்கள். இந்தத் தேர்தலில் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினராகிய எம்மைப் பலப்படுத்துவதன்மூலமே தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றார்.

0 Responses to வட்டுக்கோட்டைத் தீர்மானம் கைவிடப்பட்டது என்று எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகின்றனர்? சி.வீ.கே.சிவஞானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com