Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்ரேலிய அரசாங்கம் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதில்லை என மேற்கொண்ட முடிவிற்கு சர்வதேச மன்னிப்பு சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது 1951ம் ஆண்டு .நா பிரகடனத்திற்கு புறம்பானது எனவும் அது தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் குற்றம் சுமத்தியுள்ளது. இது நியாயமான முறையில் அடைக்கலம் கோருவோரை சட்டத்திற்கு முரணாக தடுத்து வைக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஆசிய பசுபிக் பிராந்திய வலயநாடுகளுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இது கருதப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அவுஸ்ரேலியாவின் முடிவிற்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com