Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் நாளை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள தமிழீழத்திற்கான ஆணைக்கான கருத்துக்கணிப்பு பற்றிய செய்தி அந்நாட்டு தொலைக்காட்சியில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பட்டுள்ளது. தற்போது கருத்துக்கணிப்பில் பங்குகொள்வோருக்கான பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் வாழும் நாடுகளில் பெரியளவில் வெற்றியளித்த இக்கருத்துகணிப்பானது தமிழர்கள் இப்போதும் இறைமையுள்ள தமிழீழ தாய்நாட்டை அமைப்பதில் ஆர்வமாகவே இருப்பதாக உள்ளது. அங்கு வாழும் இளஞ் சந்ததியும் இதில் ஆர்வமுடன் பங்குபற்றுவதாக அந்நாட்டு முதன்மை தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இக்கருத்துக்கணிப்பில் அவுஸ்திரேலியாவின் அனைத்துமாநிலங்களிலிருந்தும் 15000 தமிழ் மக்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அக்கருத்துக்கணிப்பை ஒழுங்கு செய்துள்ள அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

0 Responses to சிறிலங்காவில் நாளை தேர்தல்! ஆனால் அவுஸ்திரேலிய தமிழர்கள் தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்புக்கான பதிவுவேலைகளில் மும்முரம்!!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com