Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் வழியில் இந்தோனேசியக் கடற்படையால் தடுக்கப்பட்டு தாம் சென்ற கப்பலிலிருந்து இறங்க மறுத்த சிறிலங்கா அகதிகளின் பிரச்சினை தொடர்பாக இந்தோனேசிய அரசு இன்று (புதன்கிழமை) ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி கடந்த ஒக்ரோபரிலிருந்து மெராக் துறைமுகத்தில் தங்கியிருக்கும் அகதிகள் சிங்கப்பூருக்கு அண்மையிலுள்ள காலங்க் தீவிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படவுள்ளனர் என வெளியுறவு அமைச்சின் அலுவலர் சுயற்மிகோ தெரிவித்தார்.

'இன்று இந்தோனேசிய அரசாங்கம் இந்த அகதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது', என அவர் மெராக்கில் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தார்.

'இது ஒரு தனியார் சொத்து என்பதாலும் இது அவர்களுக்குச் சரியான இடம் அல்ல என்பதாலும் அவர்கள் இங்கு தங்க முடியாது. நாம் அவர்களை பலவந்தமாக அகற்றவில்லை.'

துறைமுகத்தில் தரப்பாள் கொட்டகைக்குள் இருந்த பெரும்பாலான இலங்கையர்கள் .நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரக அதிகாரிகளைச் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியடைந்திருப்பதாக அவதானி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தாம் அரசாங்கத்தினால் துன்புறுத்தப்படலாம் என்பதாலேயே வெளியேறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த முடிவும் இதேபோல கடந்த வருடம் அவுஸ்ரேலிய கப்பலில் வந்து இந்தோனேசியாவின் பிரிட்டன் தீவினை அடைந்த அகதிகள் தொடர்பான பிரச்சினையும் அகதிகள் தொடர்பான அவுஸ்ரேலியாவின் கொள்கைபற்றி அரசியல் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

வடபகுதியில் இடம்பெற்ற பேரழிவை தொடர்ந்து பெருமளவானோர் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்துள்ளது.

0 Responses to இந்தோனிசியாவில் உள்ள தமிழ் அகதிகள் சிங்கப்பூருக்கு மாற்றம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com