Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்துச்சூரியனே... பாமினியின் வரிகள்

பதிந்தவர்: தம்பியன் 12 April 2010

வேங்கையாக வந்தவரே!
அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை
எழுப்பிய அயனே.

குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை
பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர்
அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை
தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர்.
நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர்.
வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி
விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை
ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர்.
புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர்.

கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர்
காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர்.
தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை
களமாட விட்டு கண்ட ரசித்தீர்.
அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை
கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர்.
அகப்பையோடு அலைந்த அவளை
ஆட்லறியோடிங்கு விளையாடச்செய்தீர்
அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை
எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர்.
அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும்
வானிலும் தரையிலும் மிடுக்குடன்
நடப்பது உம்மால்..

தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம்
எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம்
ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய்
நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம்
என நாம் உயர்ந்தோம்.
காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான்
இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில்
தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன்
பலர் உங்களின் படை தொடர்வோம்.
காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை
நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன்
பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்..
வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற
எழியவர்கள் தலைகுனிந்தார்

அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள்
உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான்
இறுதிவரை உமைத் தொடர்வார்.
மலையென எதிரி எம் குகை புகுந்தாலும்
இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும்
உம்முன்னே நாம் நடப்போம்
வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன்
உங்களின் வழி தொடர்ந்திருப்போம்...

பாமினி

1 Response to ஈழத்துச்சூரியனே... பாமினியின் வரிகள்

  1. Antony Says:
  2. வீர மறத்தமிழனை புராணங்களில் பார்த்த நமக்கு நேரில் அறிந்த ஒரே மறத்தமிழன் அண்ணன் பிரபாகரன்.வருவான் அவன் எதிரிகளை புறமுதுகு காட்டி ஓடவைப்பான்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com