பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.பின்னர் பொதுக்கூட்டமாக மாறியது இந்த ஆர்ப்பாட்டம். பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’ப.சிதம்பரம் மூஞ்சியில் சீக்கியர்கள் செறுப்பால் அடித்த போதும் கேட்க நாதியில்லை. தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டபோதும் கேட்க நாதியில்லை. காரணம் இவர்கள் தமிழர்கள் என்பதால்.
பிரபாகரன் என்று தம்பட்ட அடித்துக்கொண்டீர்களே. அவனை பெற்ற தாயையே திருப்பி அனுப்பினோமே. உங்களால் என்ன செய்ய முடிந்தது என்று கேள்வி கேட்கிறார்கள்.எவனிடம் அடிமைப்படக்கூடாது என்று அடிமை விலங்கை உடைக்க பிரபாகரன் போராடினானோ அவனிடமே அவர் அப்பா சிறைப்பட்டு இறந்துபோனார்.
தற்போது பார்வதி அம்மாள் இந்தியா வந்தது தெரியாது என்று கூறுகிறார்களே... ராஜபக்சே மகன்கள் வருவது மட்டும் எப்படி தெரிந்தது.
அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது எப்படி?
பார்வதி அம்மாள் வந்த போது சென்னை விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்துவிடக்கூடாது என்பதில் பாதுகாப்பு இருந்தது எப்படி?
எந்த இயக்கமும் அங்கு வரவில்லை. நாம் தமிழர் இயக்கம் மட்டுமே அங்கு சென்றது.
இனி என்னை கைது செய்ய முடியாது. ஏனென்றால்.. நான் தனி நபர் இல்லை. நான் தனி இயக்கம். அதற்காகத்தான் கட்சியில் உள்ள தம்பிகளை பிடித்து உள்ளே போட துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில்தான் முத்துக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்’’என்று ஆவேசமாக பேசினார்.



0 Responses to இனி யாரும் என்னை கைது செய்ய முடியாது: ஆர்ப்பாட்டத்தில் சீமான்